Saturday, March 31, 2012

யாழ் கொலவெறி எதிர்ப்பலை


தனுஷின் கொலவெறி பற்றி பலர் பேசிக் கொண்டிருக்க, "எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இல்லாதது 'ஒய்திஸ் கொலவெறி டி...' பாடலாகத்தான் இருக்க முடியும்." என மொழி ஆர்வலர்கள், உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்து இந்தப் பாடல்.

“தமிழ்மொழியை இழிவுபடுத்தும் இந்தப் பாடல் இடம்பெரும் படத்தை மானமுள்ள எந்த தமிழனும் பார்க்கக் கூடாது” என்றெல்லாம் அறிக்கை விட்டார்கள். நேற்று 3 படமும் வெளியாகிவிட்டது. விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.

"தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறி பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்." என இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பியான அஸ்வர் பேசினார்.


'கொலவெறிடா - யாழ்ப்பாணம் பதிப்பு' என்ற தலைப்பில் வந்த அந்தப் பாடலின் வரிகள் தனித் தமிழிலேயே இடம் பெற்றிருந்தன. யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் S.J.ஸ்டாலின், வர்ணன், அமலன் ஆகியோர் இந்தப் பாடலை உருவாக்கி இருந்தார்கள். அந்தப் பாடலின் அரசியல் வெற்றியை அழகாய் பதிந்திருக்கிறது GroundView.

ரஜினியின் நெருங்கிய உறவுப் பையன்தான் 3 படத்தின் இசையமைப்பாளரான அனிரூத் ரவீந்தர். ஆனால் போகப் போக இது தனுஸ் பாடலாகத்தான் பிரபலப்படுத்தப்பட்டது.


No comments:

Post a Comment

இன்னும்