Tuesday, July 26, 2011

கரம் மசாலா - கல்யாணம்

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே, மாப்பிள்ளையாகி ஆனந்தமாகி மணமாலை சூடிடும் கல்யாணம்.

kiu
தமிழ் அல்லது ஆரிய கணக்குப்படி ஆண்டுகள் 60 இருக்கிறன. என் நண்பா்கள் பலருக்கும் உறவினரில் சிலருக்கும் இது திருமண ஆண்டு. ஆகா எத்தனை எத்தனை கலியான சாப்பாட்டு பந்திகளுடன் கலந்து போயின கடந்த மாதங்கள். அது வில்லியம் தொடங்கி கார்த்தியையும் தாண்டி இன்னும் தொடா்கிறது. எனக்கு வில்லியம் உறவு, கர்த்தி நண்பன். நம்புங்க > நம்பிக்கை தான் வாழ்க்கை
நட்சத்திரத் திருமணம்
சூரியா + ஜோ திருமணம் தான் நனறிந்த வரையில் நம்மூரில் அதிகம் ரசிக்கப்பட்ட தமிழ் நாட்டு நட்சத்திரத் திருமணம். வடக்கில் அல்லது இந்திய அளவில் ரசிக்கப்பட்டது நட்சத்திரத் திருமணம் ஐஸ்வர்யா ராய் + அபிசேக்கினுடையது.
ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு உலகமே ரசித்த கல்யாணம் இளவரசர் வில்லியமினுடையது.
நியுசிலாந்து நில அதிர்வை தொடா்ந்து, அதில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள வில்லியம் நியுசிலாந்து வந்திருந்தார். அடுத்த மாதம் அவரின் திருமண நாள் குறிக்கப் பட்டிருந்தது. அதோடு நில அதிர்வு ஒன்றும் ஆப்கான் யுத்தமல்ல, விரும்பியபடி நிறுத்திக் கொண்டு போய் வர, எந்த நேரமும் மீண்டும் நிலம் அதிரலாம். ஆனால் வில்லியம் கிறைஸ்சேர்ச்சிற்கே வந்திருந்தார். அது அவருக்கு அழகு சோ்த்தது.
the-royal-wedding
ஒரு தேவதைக் கதை (fairytale wedding) கல்யாணமாக நடந்த இந்த Royal Wedding இன் உச்ச கட்ட ஈர்ப்பு பிப்பா மிடில்டன் தான். அந்த நேரத்தில் அவரும் அவரின் உடையும் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இன்னமும் பல சஞ்சிகைகளின் அட்டைப்பட நாயகி அவரேதான்.
விளம்பர திருமணம் உண்மையில் மக்களை நட்சத்திர திருமணங்களைக் கொண்டாட வைப்பதே மீடியாக்கள் தான். இயல்பாகவே “அது எப்படி இருக்கும் எப்படி இருக்கும்” என்று சுவர் மேலாக எட்டிப்பார்க்கும் மனித மனப்பாங்கிற்கு கற்பனையாகவே பலவற்றை படைக்கிறது வியாபார உலகம்.
T-Mobile Royal Wedding
Behind the scene

ஆனால் இதைவிட அழகான கற்பனை, ஜோ கல்யாணத்தை இலக்கு வைத்த RMKVஇன் பட்டுப்புடவை விளம்பரங்கள் தான்.
ஜோ கல்யாணத்தை மக்களுக்கு முக்கியம் ஆனதாக மாற்றியதும் இந்த விளம்பரங்கள் தான். கல்யாணத்தைத் தாண்டி அதில் கலந்து கொண்டவர்கள் கதைத்துக் கொள்வது போலவும் தொடர்ந்தது இந்த விளம்பரக் கதை.
ஆனால் தொடர்ந்து வந்த ”ருக்மணி கல்யாணம்” விளம்பரக் கதை இந்த அளவிற்கு ஏனோ எடுபடவில்லை.
பதிவின் பாடல்
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
திருமண வதைத்தளம் ஒன்றில் படத்திலுள்ளது போன்ற ஓர் விளம்பரத்தைப் பார்த்தேன், யார் போவார் அந்த ஊரிற்கு தேன்நிலவிற்கு, இப்படி ஓர் ஊர்வன உங்களருகில் உறங்கிக் கொண்டல்லவா இருக்கும்.


விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாரதருக்கு ஒரு ஆசை வந்ததாம். அட ராமா. அவர் ஆசை நிறைவேற இரண்டு பேருக்கும் அறுபது குழந்தைகள் பிறக்க  அக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்களாம். அவைதான் அறுபது வருடத்தின் பெயர்களாம்.
அது என்னவோ, நான் நினைக்கிறேன் வரும் வருடம் ”குவா குவா” வருடம் தான்.

இன்னும்