Monday, June 6, 2011

வாஸ்கோ ட காமா வாசிக்க - உறுமி மேளம்

வாஸ்கோ ட காமா

எல்லாம் ”கடுகு” செய்த மாயம். அது போர்த்துக்கேயரை, கலிகட் வரை கொணர்ந்து விட்டது - கடல் வழியாக.

இந்தியாவில் தான் காலடி வைக்கும் போது உள்ளுா் இளைஞன் ஒருவன் தன்னை கொல்ல வருவான் என முன்னமே தெரிந்திருந்தால், வாஸ்கோ ட காமா தான் முன் செய்து கொண்டிருந்த, சோப்புக் கம்பனிக்கு வரி வேண்டும் வேலையையே பார்த்துக் கொண்டிருந்திருப்பார்.




உறுமி - ஆயுதம்

கேரள பாரம்பரிய போர்க் கருவிகளில் ஒன்றுதான் உறுமி, நன்றாக எண்ணை தடவப்பட்ட ஓர் வளையும் உருக்கு, உறுமி, அதன் உறையில் இருந்து வேகமாக காற்றில் விசுக்கப்படும் போது கேட்கும் அந்த DTS சத்தத்தில் ஒரு கவா்ச்சி இருக்கும்.
இதில் மூன்று நான்கு உருக்கு ஒன்றாக உள்ள  உறுமிகளும் உண்டு.

உறுமி - மேளம்

ஆட்டுத்தோலால் ஆன ஒரு தாள இசைக்கருவி, தவில் போல. நாட்டுப்புற இசையில் உறுமி அதிகமாக இடம் பெறுகிறது. இந்த பாட்டில், கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு பச்சை சேட்டோடு நடுவில ஓருத்தர் வாசிப்பாரே அது தான் உறுமி மேளம்.



வாஸ்கோ ட காமா மலயாளத்தில் மட்டுமல்ல, பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும், ஏன் தமிழிலும் நடிக்கிறார் - ”பதினைந்தாம் நுாற்றாண்டின் உறைவாள்”.


பெரிய பெரிய மின்மினிக் கண்களுக்காகவே இந்த படம் பார்க்கலாம் போல, வித்தியா பாலன், ஜெனிலியாவையும் சேர்த்துத்தான்.



http://www.urumithefilm.com/

No comments:

Post a Comment

இன்னும்