Sunday, May 22, 2011

நீங்கள் சூசன்னாவை காதலிப்பீர்கள்

சூசன்னாவும் ஏழு கணவர்களும் - 7 Khoon Maaf

ரஸ்கின் பாண்டின் ”சூசான்னாவின் ஏழு கணவர்கள்” என்கிற சிறுகதையை திரைப்படம் ஆக்கியிருக்கிறார் விஷால் பரத்வாஜி.
சூசன்னா ஒரு பேரழகி, பணக்காரி. இந்த கதை சூசன்னாவிடம் வேலை செய்து கொண்டு, அவளின் ஆதரவில் படித்து டாக்டராகும் விவான் ஷாவின் பார்வையில் சொல்லப்படுகிறது.


முதல் கணவனான மேஜர் எட்வின் -நீல் முகேஷ்-  ஒரு கால் ஊனமுற்றவன். அதிக சந்தேக புத்தியுள்ளவன். தன் கீழுள்ளவர்களை சித்ரவதை செய்பவன். அவன் இறக்கிறான்.


இரண்டாமவன்: கேரல் பாடும் ஜிம்மி -ஜான் ஆப்ரஹாம்- திருமணம் செய்து கொள்ள அவன் ஒரு பெரிய ராக் ஸ்டார் ஆகிறான். பணமும், புகழும் அவனை முழு போதையாளனாய் ஆக்குகிறது. அவனும் திடீரென இறக்கிறான்.

மூன்றாமவன்: வாசுல்லா -இர்பான் கான்- எனும் நாடோடிக் கவிஞ்ஞனை திருமணம் செய்கிறாள். கவிஞனாய் உருகி, உருகி காதல் செய்யும் அவன், கட்டிலில் ஒரு வெறி பிடித்தவனாய் அவளை தின்கிறான். அவனும் இறக்கிறான்.

அடுத்தவன்: நிக் - ரஷ்யன் ஒருவனை சூசன்னா திருமணம் செய்ய, அவனுக்கு குடும்பம் ரஷ்யாவில் இருப்பது தெரிய வர அவனும் இறந்து போகிறான்.

அடுத்தவன்: இன்ஸ்பெக்டர் கீமத்லால் -அன்னுகபூர்-  அவளின் மேல் பித்தாய் அலைய ஆரம்பித்து திருமணம் செய்து கொண்டு ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறான்.

பின்பு: காளான்களை ஆராய்ச்சி செய்யும் மதுசூதன் -நஸ்ருதீன் ஷா- எனும் மருத்துவரை திருமணம் செய்கிறாள், பின் மதுசூதன் சூசன்னாவால் சுட்டுக் கொள்ளப்படுகிறான்.

சூசன்னாவின் வீடு தீப்பிடித்து எரிந்ததில் அவள் இறந்து போனதாய் முடிக்கப்படுகிறது case. ஆனால் அவளோ, அவளுடய பாவங்கள் அனைத்தையும் தெரிந்தவர் ஒருவரை மணந்து கொள்கிறாள். பின் என்ன நடந்தது?

இவ்வளவுக்கும் பிறகும் நீங்கள் சூசன்னாவை காதலிப்பீா்கள்! - அது தான் சூசன்னா - ப்ரியங்கா சோப்ரா - அட்டகாசமான நடிப்பு. ஒவ்வொரு திருமணத்திற்கும் அவரது பாடிலேங்குவேஜில் தெரியும் வித்தியாசங்களில் சும்மா மிரட்டுகிறார்.

இதில் நடித்திருக்கும் மற்றவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தியிருக்கிறார்கள்.



அன்னுவின் திருமணக் காட்சியில் கமறா அப்படியே pan செய்து திரும்ப வரும் போது அன்னுவின் சவப்பெட்டியில் முடியும், அருமை.

மேலோட்டமான பார்வையைத் தாண்டி, இக்கதை ஆழமான ஓரு வரலாற்று வலியை பிரதிபலிக்கிறது. அதை இங்கே படிக்கலாம்.

முடிந்தால் படத்தையும் பாருங்க

(Its a Dark film)
[M+] : http://www.imdb.com/title/tt1629376/

No comments:

Post a Comment

இன்னும்